tamilnadu

img

அதிகாரிகளை பெல்ட்டால் அடிப்பேன் என்று மிரட்டிய மத்திய அமைச்சர்....

ராய்ப்பூர்:
“பாஜக-வினருக்கு மதிப்பு அளிக் காத அதிகாரிகளை பெல்ட்டால் அடிப்பேன்” என்று மத்திய அமைச்சர் ரேணுகா சிங் பகிரங்கமாக மிரட்டல் விடுத்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத் தில் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் பல்ராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் குப்தா. பாஜகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.இவர் தில்லிக்குச் சென்றுவிட்டு வந்த நிலையில், அதிகாரிகள் அவரைபல்ராம்பூர் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் அவர், தனிமைப் படுத்தும் மையத்தில் போதிய வசதிகள்இல்லை என்று பேசி, அதனை மொபைல்போனில் வீடியோவாக பதிவுசெய்துசமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த, தனிமைப் படுத்தும் மையத்திற்கு பொறுப்பான அதிகாரிகள்- எதற்காக இப்படி பொய்ப்பிரச்சாரம் செய்கிறீர்கள்? என்று அவரை கண்டித்துள்ளனர்.உடனே, அதிகாரிகள் என்னைத் தாக்குகிறார்கள் என்று, புதிய பிரச்சாரத்தை திலீப் குப்தா ஆரம்பித்துள்ளார்.இந்த பின்னணியிலேயே, பல்ராம் பூர் மையத்திற்குச் சென்ற, மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறைஇணையமைச்சர் ரேணுகா சிங், திலீப்குப்தாவைச் சந்தித்துப் பேசியதுடன், அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, “நாங்கள் ஆட்சியில் இல்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். நாங்கள் 15 வருடங்கள் ஆண்டுள்ளோம். காவி உடை அணிந்த பாஜகவினர்பலவீனமானவர்கள் என்று நினைக்காதீர்கள்...” என்று ஆத்திரம் அடைந்துள்ளார். 

“உங்களை அறைக்குள் பூட்டிவைத்து, பெல்ட்டால் அடிப்பது எப்படிஎன்பது எனக்கு தெரியும்” என்றும்பகிரங்கமாக மிரட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அமைச்சரின் மிரட்டல் வெளிச் சத்திற்கு வந்துள்ளது.சத்தீஸ்கரில் நீண்டகாலமாக ஆட்சி நடத்தி வந்த பாஜக, கடந்த தேர்தலில் தோற்றுப் போனது. தற்போது பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;